அடி வயிறு கொழுப்பை கரைக்கும்... இந்தக் கூட்டு சாப்பிட்டு பாருங்க!
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க சுரைக்காய் அருமையான உணவாக பார்க்கப்படும் நிலையில், சுரைக்காய் கூட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறியில் ஒன்று சுரைக்காய். சுரைக்காய் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சேர்ப்பதுடன், கர்ப்பிணி பெண்களும் அதிகமாகவே சாப்பிடுகின்றனர்.
தற்போது உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் கூட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் - 1
பாசிப்பயறு - 100 கிராம்
சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பூண்டு - நான்கு பல்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
சீரகம் -அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு -2 அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இடித்த சோம்பு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் சுரைக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு குக்கர் ஒன்றில் 100 கிராம் பாசிப்பயறு நறுக்கிய சுரைக்காய், ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
சுரைக்காயிலேயே அதிக நீர்ச்சத்து இருப்பதால், குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.
வெந்ததும், கரண்டியாலேயே நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு தாளிப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். அரை டீஸ்பூன் சோம்பைத் இடித்துச் சேர்த்தால் வாசனை அருமையாக இருக்கும்.
அதனுடன் கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கிக் கொள்ளவும். கடைசியாக, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இதை கூட்டுடன் சேர்த்துக்கொள்ளவும். கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கடைசியாக இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |