Diwali Sweets: வாயில் கரையும் சாக்லேட் சேமியா பர்ஃபி- இரண்டே பொருள் வைத்து செய்யலாமாம்
புதிதாக திருமணமானவர்கள் நிறைய பலகாரங்கள் அதிகமாக செய்ய வேண்டுமே என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பார்கள்.
அப்படியான குழப்பத்தில் இருப்பவர்கள் பெரியளவு செலவு இல்லாமல் இனிப்பு மற்றும் கார வகைகளை எப்படி வித்தியாசமாக செய்து அசத்தலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சாக்லேட் சேமியா பர்ஃபி
தேவையான பொருட்கள்
- சாக்லேட் 100 கிராம்
- சர்க்கரை 50 கிராம்
- வறுத்த சேமியா 100 கிராம்
- பால் 1/2 லிட்டர்
- முந்திரி பருப்பு 15
- ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
- நெய் 1/4 கப்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் சூடான பாலை ஊற்றி, அதில் சாக்லேட்டை போட்டு கலந்து கொள்ளவும். அதனுடன் சேமியாவையும் போட்டு வேக வைக்கவும்.
இது ஒரு புறம் வெந்து கொண்டிருக்கும் பொழுது வேறு ஒரு சின்ன கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு துண்டுகளை போட்டு வறுக்கவும். சேமியா நன்கு வளர்ந்தவுடன் சாக்லேட் கரைசலை சேர்த்து சர்க்கரை, நெய் ஆகியவற்றை மிதமான சூட்டில் வைத்து கிளறி விடவும்.
அதன் பின்னர், ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு துண்டுகளையும் ஒன்றாக போட்டு கிளறி விட்டு, வில்லைகள் பதத்திற்கு வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி இறக்கவும்.
கொஞ்சம் சூடு இறங்கியவுடன் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறினால் சாக்லேட் ருசியில் சேமியா பர்ஃபி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |