சளி தொந்தரவா? Chlorpheniramine Maleate + Phenylephrine பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சளி பிரச்சனைகளை சரிசெய்வதற்கு Chlorpheniramine Maleate+Phenylephrine மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
மூக்கில் நீர் வடிதல், தும்மல், தொண்டையில் அரிப்பு, நீர் நிறைந்த கண்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
பக்கவிளைவுகள்
வாந்தி
தலைவலி
மயக்கம்
தலைச்சுற்றல்
உயர் ரத்த அழுத்தம்
அடிவயிற்றில் வலி
மங்கலான பார்வை
தொண்டை வறட்சி
அரிப்பு
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் முழுமையும் எடுத்துக்கொள்ளவும், மாத்திரை பயன்படுத்திய பின்னர் மயக்கம், தூக்க கலக்கம் இருக்கும் என்பதால் வாகனங்களை இயக்க வேண்டாம் என கூறப்படுகிறது.
இதேபோன்று ஆல்கஹால் எடுத்துக்கொள்வதையும் முற்றிலுமாக தவிர்க்கவும்.
குழந்தை பெற தயாராகும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவரிடம் இதைப்பற்றி தெரிவிக்கவும்.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
எந்தவொரு மருந்தையும் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் பக்கவிளைவுகள் உண்டாகலாம்.
சுவாசப் பிரச்சனைகள், கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய், இதயம் தொடர்பான நோய்கள் இருப்பின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
தைராய்டு, சிறுநீரகப் பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் மருத்துவரின் முறையான அறிவுரைப்படி மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் மற்றும் நாட்களில் கொடுக்கவும்.
தொடர்ந்து 7 நாட்கள் பயன்படுத்திய பின்னரும் தீர்வு கிடைக்கப்பெறாமல் இருந்தாலோ பக்கவிளைவுகள் இருந்தாலோ மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
முக்கிய கவனத்திற்கு
Chlorpheniramine Maleate + Phenylephrine மருந்துகள் மயக்கத்தை உண்டுபண்ணலாம் என்பதால் பால் மற்றும் உணவுடன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
கொழுப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்ள வேண்டாம், ஒருவேளை வாந்தி தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்.
மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னர் வாகனங்களை இயக்குவது, கனரக தொழிலில் ஈடுபடுவது, ஆல்கஹால் அருந்துவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
மருத்துவர் கூறிய அளவுகளில், பரிந்துரைத்த நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தவும், அளவு அதிகமாகவோ, தொடர்ச்சியாகவோ பயன்படுத்த வேண்டாம்.