சிகிச்சைக்கு பின் ரசிகர்களை சந்திக்கப்போகும் நடிகர் விக்ரம் - எங்கு தெரியுமா?
நடிகர் விக்ரம் கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஆனால், அவர் மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தீயாய் பரவத்தொடங்கின.
இதற்கு நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
மகன் துருவும் அப்பாவுக்கு நெஞ்சில் அசௌகரியமாக உணர்ந்தார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகிறார்.

அவருக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார். இன்னும் ஒருநாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.
இந்த பதிவு சரியான விளக்கமாக இருக்கும் என நினைக்கிறேன் என பதிவினை வெளியிட்டு இருந்தார். மேலும், விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கோப்ரா இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்விருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The Grand Audio Launch Of #Cobra on July 11 at #PhoenixMarketcityChennai
— Udhay (@Udhaystalin) July 8, 2022
with the PRESENCE OF #CHIYAANVIKRAM ?
An @arrahman Musical ?
An @AjayGnanamuthu Film ?@7ScreenStudio @Udhaystalin @RedGiantMovies_ @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth #CobraAudioLaunch pic.twitter.com/8JYCxynSDz