முடி உதிர்வு அதிகமாகி சொட்டையாகும் தருணத்தில் இருக்கீங்களா? அப்போ இத தடவுங்க
தற்போது இருக்கும் பெண்களுக்கு தலை முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
இவ்வாறு அதிகமாக இருக்கும் பொழுது மருத்துவர்களை நாட முன்னர் வீடுகளில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம்.
இதன்படி, சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை Shampoo போட்டு குளிப்பதற்கு முன்னர் தலையில் தடவி விட்டு 20 நிமிடங்கள் வைத்திருந்து அதன் பின்னர் குளிக்கவும்.
இவ்வாறு செய்தால் தலைமுடி பிரச்சினை காலப்போக்கில் சரியாகி விடும். இது போல் தலைமுடி உதிர்வை எப்படி கட்டுபடுத்தலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தலைமுடி உதிர்விற்கான தரமான தீர்வு
1. சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். இவ்வாறு சரியாக 6 மாதங்கள் தொடர வேண்டும். தொடர்ந்தால் தலைமுடி பிரச்சினை காலத்திற்கும் வராது.
2. சிகைக்காய் உபயோகி குளிப்பதால் தலைமுடி பிரச்சினை தடுக்கலாம்.
3. சின்ன வெங்காயம் அரைத்து தலைக்கு பூசுவதால் பொடுகு, பேன் ஆகிய பிரச்சினைகள் இருந்தாலும் நாளடைவில் குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |