விடுதி மாதிரி இருக்கு: நடிகர் சிரஞ்சீவியின் ஆண் குழந்தை கருத்து...வலுக்கும் எதிர்ப்பு!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்போது தனது பேரக்குழந்தை குறித்து பேசியுள்ள விடயம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
பிரபல தெலுங்கு மூத்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் மற்றும் அவரது மகன் ராஜா கௌதம் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தெலுங்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் அவர் தனது பேரக் குழந்தைகள் குறித்து பேசிய விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
சிரஞ்சீவி கருத்து
சிரஞ்சீவி குறிப்பிடுகையில், “நான் வீட்டில் இருக்கும்போது, என் பேத்திகள் என்னைச் சுற்றி இருக்கும் போது, நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன் போல் உணர்வேன்.
அதனால் ராம் சரணிடம் நான் ஆசைப்படுவது, இந்த முறையாவது, நம் மரபு தொடர ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதுதான்.
ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயமும் எனக்கு இருக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் பிரபல நடிகர் என்பதும் இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் இவ்வாறு பெண் குழந்தைகள் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
சிரஞ்சீவிக்கு எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அரசியல்வாதிகள் சிலரும் சிரஞ்சீவிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். 'ஆண்,பெண் என இருவருமே குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவர்கள் தான்' என கடுமையாக இவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |