தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம்
தீபாவளி பரிசாக தன்னுடைய கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா அதிரடி ஆக்ஷன் குறித்து அவருடைய கணவர் பேட்டியில் கொடுத்திருக்கிறார்.
நடிகை ஸ்வேதா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகியாக களக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்வேதா.
தமிழ்ச்செல்வி என்ற முன்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு வெளியுலகிற்கு காட்டாமல் ரகசியமாக குடும்ப நடத்தி வந்திருக்கிறார்.
ஆனாலும் சில பேட்டிகளில் நடிகை ஸ்வேதா தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசுகையில், “2 வருடமாக காதலிக்கிறேன். வீட்டில் அனைவருக்கும் தெரியும். எனக்கு சூட் முடிஞ்சா கூட்டிட்டு போறது, மிட் நைட்டுல பிக்அப் பண்ணுறது எல்லாம் அவர் தான். சீரியல் எபிசோட்களை எனக்கு முன் அவர் பார்த்து விடுவார்...” என மகிழ்ச்சியாக பேசியிருப்பார்.
இதற்கிடையில், “வீட்டிற்கு சென்று வருகிறேன்” என கணவரை விட்டு அம்மா வீட்டிற்கு சென்ற ஸ்வேதா கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கே வரவில்லை. பல வழிகளில் ஸ்வேதாவை அணுகிய கணவர், என்ன செய்வது என தெரியாமல் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுக்கிறார்.
இருந்த போதிலும் சண்டை முடிவது போன்று இல்லாமல் நாளுக்கு நாள் சீரியலை போன்று வளர்ந்து கொண்டே வருகிறது.
தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அதற்கு பரிசுக் கொடுக்கும் விதமாக ஸ்வேதா காதலன் எனக் கூறிக் கொண்டிருந்த கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அதில், அவருடைய தனிப்பட்ட கருத்துக்களை கூறி விட்டு, தன்னை விட்டு பிரிந்த பின்னர் மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாகவும் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் கொடுத்த கணவர், “எனக்கு அவருடைய வாழ்வதற்கு விருப்பம். அவளுக்கான அனைத்தையும் மாற்றிக் கொள்கிறேன். நான் விவாகரத்து தர மாட்டேன்..” என தெளிவாக கூறி விடுகிறார். இந்த காணொளி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சின்ன மருமகள் சீரியல் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் உள்ள வீட்டு பிள்ளையாக இருக்கும் ஸ்வேதா இதற்கு என்ன பதில் கொடுப்பார் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |