அடுத்தடுத்து எழும் தொடர் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்: அம்பலப்படுத்திய பாடகி சின்மயி
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆன்லைன் வகுப்பால் பல பிரச்சினைகளையும் மாணவிகள் சந்திக்கநேரிடுகிறது.
அந்த வகையில் சமீப நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு வன்கொடுமை ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
மேலும், மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, நடிகை லட்சுமி பிரியா ஆகியோரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
தற்போது சின்மயி அவரின் ட்விட்டர் பக்கதிலும், பத்ம சேஷாத்ரி, மகிரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை பாடகி சின்மயி அம்பலப்படுத்தி வருகிறார்.