நயன்தாராவை கொச்சைபடுத்திய கமண்ட்! தட்டி கேட்க முடியாததால் சின்மயி ஆவேசம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பற்றி அவதூறாக கமன்ட் செய்ததால் சின்மயி தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் .
இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு தற்போது இரட்டை பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் நாளை கனெக்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது. கனெக்ட் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா கைவசம் 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் வைத்துள்ளார்.
கொச்சைப்படுத்து கமண்ட்கள்
இவர் சினிமாவில் வந்த காலம் தொட்டே பலர் இவரது வளர்ச்சி பிடிக்காமல் அவரை கொச்சைப்படுத்து கமண்ட்டுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவார்கள்.
நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ. அதே அளவு அவரின் கடந்த காலத்தை எல்லாம் குறிப்பிட்டு சில மோசமான கமெண்டுகளும் வந்தது.
மருத்துவரின் சர்ச்சை பதிவு
இந்நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்த போது மருத்துவர் ஒருவர் இதை கமன்ட் செய்ய ஆவலுடன் இருந்தது. இவரின் நடிப்பு திறமையை நான் மதித்தாலும், 40ஐ நெருங்கி பாட்டி வயதை வயதில் இவர் எப்படி குடும்பம் குழந்தையை பெறப்போகிறார் என்று பாவமாக இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF ) இவருக்கு உதவும் என்று நம்புகிறேன் ‘ என்று மோசமாக கமன்ட் செய்து இருந்தார்.
சின்மயின் கருத்து
இதனை கண்ட பாடகி சின்மயி, இவரின் இந்த பதிவை பகிர்ந்து அவரின் விவரங்களை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் ‘மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், இதை நான் அனுப்பினேன். ஒரு நடிகை திருமணம் முடிந்து இருக்கிறது. அதை பார்த்து இந்த மருத்துவர் இப்படி ஒரு கேவலமான கமெண்டை போட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.
தற்போது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சின்மயி இப்படி நயன்தாராவிற்கு ஆதரவாக பதிவிடுவது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.