'பெண்களை ஏமாற்றாதீர்கள்' போராட்டத்தில் இறங்கிய 7 காதலிகள்: அதுவும் திருமண நாளில்...! என்ன நடந்தது தெரியுமா?
திருமணம் செய்து கொண்ட காதலனுக்காக அவரின் முன்னாள் காதலிகள் போராட்டத்தில் இறங்கிய சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.
சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற நபருக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மண்டபத்தில் கோலாகமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின் போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.
போராட்டத்தில் குதித்த பெண்கள்
அவர்கள் கையில் பேனர் ஒன்றை வைத்து இருந்தனர். அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டபத்திற்கு வெளியே அவர்கள் பேனரை பிடித்துகொண்டு நின்றதை திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆர்வத்துடன் பார்த்து என்ன நடந்தது என்று விசாரித்தனர்.
"பெண்களை ஏமாற்றாதீர்கள். அவர்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலைமை என்னாகும் என கோஷங்கள் எழுப்பினர்.
முன்னாள் காதலிகளுடன் சென்னும் அவரது வருங்கால மனைவியும் தகராறில் ஈடுபட்டனர். இருப்பினும், முன்னாள் காதலிகளை பிரிந்ததற்கான காரணங்களை சென் வெளியிடவில்லை. தான் செய்ததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து சென் கூறும் போது பெண்களின் எதிர்ப்பால் தான் கோபப்படவில்லை என்றும், கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.
நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் இருந்தேன், பல பெண்களை காயப்படுத்தினேன் உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என கூறினார்.