தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது வினோத சிறுவன்... காரணம் என்ன?
China Boy Mini Coffin her Father: சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிறிய சவப்பெட்டி செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன சிறுவன்
சீனாவைச் சேர்ந்த Wang (வாங்க்) என்ற 7 வயது சிறுவன் விளையாட்டாக காகிதங்களைக் கொண்டு தனது தந்தைக்கு சிறிய சவப்பெட்டி, மலர் வளையங்கள் செய்துள்ளார்.
சிறுவனின் தாய் மா என்பவர் தனது மகனின் செயலைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதாவது சிறுவனை 4 வயதாக இருக்கும் போது, இறுதி சடங்கு நிகழ்விற்கு அவனை அழைத்துச் சென்று வந்த பின்பு இந்த ஆர்வம் அதிகமாகியுள்ளது.
இறுதிச்சடங்குக்கு தேவையான சவப்பெட்டி, மலர் வளையங்கள், காகித கோபுரங்கள் மற்றும் விலங்கு உருவ படையல்கள் என அனைத்தையும் குறித்த சிறுவன் தனது கைகளால் செய்கின்றான்.
அதுமட்டுமின்றி இறுதி சடங்கு நடத்துபவராகவும் செயல்பட்டு வருகின்றார். அதாவது இரங்கல் வாசகங்களை உச்சரிப்பதும் மட்டுமின்றி, துக்கவீட்டில் இறந்தவர் முன் நின்று செய்யும் பாரம்பரியமான சடங்கான Ku Ling சடங்கையும் செய்வதுடன், தனது பெற்றோரின் செல்போனில் இறுதிசடங்கு இசையையும் ஒலிக்கவிடுகின்றான்.

தந்தைக்கு இறுதி சடங்கு
சில நேரங்களில் Lego கற்களைப் பயன்படுத்தி இறுதி சடங்கு வேலையையும் செய்வதாகவும், Wang-கின் ஆசிரியர் ஒருமுறை, மலர் வளையங்களின் ஓவியங்களால் ஓவிய புத்தகத்தினை நிரப்பியிருப்பதாக புகார் அளித்துள்ளாராம்.
இதற்கு பின்பு தான் பெற்றோர்கள் இவனது பொழுதுபோக்கு விளையாட்டை தெரிந்து கொண்டார்களாம். மேலும் இதனை அபசகுணமாக கருதாமல் அவரனது விளையாட்டிற்கு துணையாகவும் இருக்கின்றனர்.
சிறுவன் செய்யும் சவப்பட்டிற்கு அவரது தந்தை இறந்தவர் போன்று நடித்து காணப்படுவதாகவும், குறித்த சிறுவன் இந்த சடங்கினை தனது அப்பாவை வைத்து செய்வதாகவும் கூறுகின்றனர்.

சிறுவனின் தாத்தா, பாட்டியும் இதனை அபசகுணமாக எண்ணாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருக்கும் என்று கூறி மகிழ்ந்துள்ளனர். மேலும் இதனை செய்வதற்கு பெற்றோர்களின் உதவியை நாடாமல், மொபைல் மூலமாக பார்த்து கற்றுக் கொண்டுள்ளான்.
சிறுவனின் தாய் ஒரு தெருவோர வியாபாரி என்பதால் தன்னுடன் அழைத்துச் செல்லும் போதும் இந்த விளையாட்டை தான் விளையாடுவதாகவும், மற்ற வியாபாரிகள் இதனைக் கண்டு எரிச்சல் படுவதாகவும் கூறுகின்றார்.
எதிர்காலத்தில் இறுதி சடங்கு துறையில் தான் வேலை செய்யப்போவதாகவும் சிறுவன் தாயிடம் கூறியுள்ளான். சிறுவனின் செயலைக் கண்டு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |