3 கிரகங்களின் வக்ர பயணம்: அடுத்த 24 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Saturn, Rahu & Ketu Retrograde : ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, அவற்றின் நிலைகளும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.குறிப்பாக, கிரகங்கள் நேர்கதியில் பயணிப்பதைவிட வக்ரகதியில் பயணிக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தற்போது நிழல் கிரகங்களான ராகு, கேது மற்றும் சனி பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன. இதில் சனி பகவான் மீன ராசியில் வக்ரமாகப் பயணித்து வருகிறார். இவ்வாறு மூன்று கிரகங்களும் ஒரே நேரத்தில் அடுத்த 24 நாட்களுக்கு வக்ர நிலையில் இருக்கவுள்ளன.

இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் சவால்களைச் சந்திக்க நேரிடும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களின் வக்ரப் பெயர்ச்சியால் தொழில், நிதி நிலை தனிப்பட்ட வாழ்க்கை என பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடலாம்.
எனவே, அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரும் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. வியாபாரிகள் முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்க வேண்டும்.
பணியிடப் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன், கோபத்தையும் கட்டுப்படுத்துவது அவசியம். இருப்பினும், டிசம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையில் ஓரளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுனம்

சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களின் வக்ரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே, சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையக் கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தினரிடமும் கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி

சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பதால், கன்னி ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், முதலீடுகள் செய்யும்போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக, நெருக்கமான ஒருவரால் ஏமாற்றப்படும் சூழல் உருவாகலாம் என்பதால், யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
துலாம்

சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களின் வக்ர நிலையால் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 24 நாட்கள் சவாலான காலமாக அமையலாம்.
வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளையும் தள்ளிப்போடுவது நல்லது.
நீண்ட தூரப் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு செயலையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும். அவசர முடிவுகள் தேவையற்ற இழப்புகளுக்கு வழிவகுக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |