சரித்திரம் படைத்த சீனா! நிலவின் மண்ணை பூமிக்கு கொண்டுவந்த Chang'e-6
நிலவிலிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவந்து சீனா சாதனை படைத்துள்ளது.
நிலவின் தொலைதூரப் பகுதியின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் ஏவப்பட்ட சீனாவின் Chang'e-6 சந்திர ஆய்வு விண்கலம், மண் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.
சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (CNSA) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:07 மணிக்கு வடக்கு சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் Chang'e-6 Return Capsule தரையிறங்கியது.
இதன் மூலம், நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து (far side of Moon) மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
இதுவரை எந்த நாடும் தென் துருவத்தை ஆய்வு செய்யவில்லை.
Chang'e-6 சந்திர ஆய்வு விண்கலம் கடந்த மாதம் 3=ஆம் திகதி பூமியில் இருந்து புறப்பட்டு ஜூன் 2-ஆம் திகதி நிலவின் தென் துருவத்தில் உள்ள ஐட்கின் பேசின் (South Pole-Aitken) பகுதியில் தரையிறங்கியது.
China Chang'e-6 brings first-ever samples from Moon's far side, Chang'e-6 mission