எஸ்கேப் ஆகிய 900 பாம்புகள்... வெள்ளத்தில் படமெடுத்து நின்ற பகீர் காட்சி
சீனாவில் வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட 900 பாம்புகள் ஆங்காங்கே தண்ணீரில் நின்று படமெடுக்கும் காட்சி பார்வையாளர்களை பதற வைக்கின்றது.
வெள்ளத்தில் சிக்கிய 900 பாம்புகள்
தெற்கு சீனாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளநீரின் வேகத்தினை தாங்கமுடியாமல் பாம்பு பண்ணை ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட பாம்புகள் தப்பி வெளியே சென்றுள்ளது.

வெள்ளத்தில் ஆங்காங்கே நீந்தி செல்வதையும், படமெடுத்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. பாம்புகளை மீட்கும் பணியில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாம்புகளைப் பார்த்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |