காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
எல்லோரும் தேனீர் குடிப்பது வழக்கம். இந்த தேனீர் பல வகைகளில் செய்யப்படுகின்றது. அப்படி தான் மிளகாய் டீ. இது மூலிகை டீ வகைகளில் சேரும்.
நீங்கள் புதிய மூலிகை தேநீரை சாப்பிட விரும்பும் நபர் என்றால் கண்டிப்பாக இந்த மிளகாய் தேனீர் பயனுள்ளதாக இருக்கும்.இதை குடிப்பதால் உடலில் இருக்கும் பல நோய்களை இது தீர்க்கின்றது.
இந்த மிளகாய் டீயில் பல சத்துக்கள் காணப்படுகின்றது.அதிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. எனவே இந்த மிளகாய் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிளகாய் டீ
இந்த டீ கட்டாஞ்சாயா அல்லது கிரீன் டீ இரண்டிலும் பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் சேர்த்து தயாரிக்கப்படுகின்றது. இதனுடன் பட்டை, ஏலக்காய், இஞ்சி ஆகியவையும் சேர்க்கலாம்.மிளகாயில் கேப்சைசின் என்ற பதார்த்தம் உள்ளது.
இதில் வலிகளைப் போக்கும் குணங்கள் உள்ளது. இது ஆய்வில் கூறப்பட்ட உண்மையாகும். இதில் இருக்கும் கேப்சாய்சின் என்பது செரிமான செல்களை தூண்டுகிறது. இதனால் இதனால் உங்களுக்கு வாயில் உமிழ்நீர் நன்றாக சுரந்து, உங்களின் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.
இந்த மிளகாயில் இருக்கும் காரச்சுவையானது கேப்சாய்சின் எனப்படுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் அதிகப்படியான கலோகளை குறைக்க முடியும். மிளகாயில் இருக்கும் கேப்சாய்சின் என்ற உட்பொருள் வீக்கத்திற்கு எதிரான பண்புகளை தன்னுள் கொண்டுள்ளது.
இது உடலில் சைட்டோகைன்கள் மற்றும் ப்ராஸ்டோகிளாண்டிகள் சுரக்க உதவுகிறது. இதனால் வீக்கம் குறைக்கபட்டு ஆர்த்ரிட்டிஸ், குடல் வீக்கம், சரும வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
மிளகாயில் உள்ள கேப்சாய்சின், உங்கள் உடலில் எண்டோர்ஃபின்கள் அதிகம் வெளியாக உதவுகிறது. இது உடலின் இயற்கை வலிகளைப் போக்கி மனநிலையை மாற்ற உதவும். முக்கியமாக மன அழுத்தம் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |