கோபிநாத் முன்பு கதறிய வாடகைத்தாய்! 10 மாதம் சுமந்தேன் முகத்தைக்கூட பார்க்கவில்லை
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடகைத்தாய் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறி தொகுப்பாளர் கோபிநாத்தையே கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் வாடகைத்தாய் முறை தேவை? மறுபக்கம் தேவை இல்லை என்கிற விவாதம் நடந்தது.
இதில் வாடகைத்தாய் ஒருவர் பங்கு பற்றி பேசியிருந்தார். அவர் கூறியதாவது,
நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்த வாடகைத்தாய்
எனது கணவர் ஆட்டோ ஓட்டுனர். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வறுமையான சூழ்நிலையில் கணவரின் வருமானம் போதாத நிலையில் நான் வாடகைத்தாயாக மாறினேன்.
முதலில் தன்னை புரோக்கர் ஒருவர் அணுகி கருமுட்டை தானம், அல்லது வாடகை தாயாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
2 லட்ச ரூபாய் தருவதாக சொன்னார். அதை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்த பொழுது குடும்பத்தார் அதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்றபொழுது ஒரு பெண் தனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.
தனது மாமியார் குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி தனது கணவருக்கு வேறொரு திருமணம் செய்யும் முயற்சிக்கிறார் என்று கதறி அழுதார்.
இதுபோன்ற பெண்களின் பிரச்சினைக்காக வாடகை தாயாக ஏன் நிற்கக்கூடாது என்று யோசித்தேன். பிறகு தான் வாடகை தாயாக ஒரு தம்பதிக்கு இருக்க ஒப்பு கொண்டேன்.
வாடகை தாயாக இருக்கும் முதல் ஐந்து மாதங்களில் தான் வீட்டில் இருந்த பொழுது பலரும் தன்னை மிக கேவலமாக பேசினார்கள்.
தன்னையும் வாடகைத்தாயின் கணவரையும் இணைத்து அசிங்கப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் மனம் பொறுக்க முடியாமல் மீதி காலத்திற்கு மருத்துவமனை விடுதிக்கு சென்றுவிட்டேன்.
குழந்தை முகத்தை கூட தன்னிடம் காட்டவில்லை
பிரசவ நேரத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தை பிரசவிக்கப்பட்டது. தான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபொழுது தன்னிடம் எந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
குழந்தை முகத்தை கூட தன்னிடம் காட்டவில்லை அது ஆணா? பெண்ணா? என்று கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
நான் வாடகை தாயாக இருந்தாலும் என் வயிற்றில் சுமந்த அந்த நெருக்கத்தால் மனதளவில் நான் கடுமையான பாதிக்கப்பட்டேன் என்றும் கதறி அழுதார்.
கோபிநாத் அதிரடி கேள்வி
பிறகு குழந்தை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்ததா என்று கேள்வி கோபிநாத் எழுப்பினார்.
எனக்கு எதுவுமே தெரியாது, குழந்தை பிரசவம் ஆனதோடு வந்ததுதான். ஆனால் என் வயிற்றில் பிறந்த அந்த குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பிறந்த மே 16 அன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வருகிறேன் என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
உண்மையில் வாடகை தாயாக வறுமையில் இருப்பவர்களை தான் தேர்வு செய்கிறார்கள். வாடகைத்தாயாக வருவதில் பணக்காரர்களே, மத்திய தர வர்க்கத்தினரோ ஒப்புக்கொள்வதில்லை.
அவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை வறுமையை பயன்படுத்தி வாடகை தாயாக ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வாடகை தாய்களை தேடிப்பிடிப்பதற்கு பதிலாக எத்தனையே ஏழை குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவரை குழந்தையாக வளர்க்கலாம் என்பதே பலரது கேள்வி.