சிரித்துக் கொண்டே வந்த சிறுவன்! இடிபாடுகளில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட காட்சி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று இரண்டு நாட்களுக்கு பின்பு சிரித்துக் கொண்டே வெளியே வந்துள்ள காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடே நிலைகுலைந்து போயுள்ளது.
அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து நாடுகளிலும் இந்த நலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படை வீரர்கள் மீட்டெடுக்க போராடி வருகின்றனர். இதில் குழந்தைகள் சிக்கி பரிதவிக்கும் நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய தம்பியை காப்பாற்றி சிறுமி ஒருவர் செயல்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று தண்ணீர் போத்தல் மூடியில் வைத்து கொடுக்கப்பட்ட நீரை மகிழ்ச்சியாக குடித்துள்ள காட்சியும் வெளியாகி இருந்தது.
சிரித்துக் கொண்டு வெளிவந்த குழந்தை
இந்நிலையில் குறித்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி தண்ணீர் அருந்திய குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த குழந்தை வெளியே வருகையில், சிரித்த முகத்துடன் வந்துள்ளது காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது. இன்னும் பல குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் மீட்கும் காட்சி அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.