சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கருவில் இருக்கும் போதே தொற்றிக்கொள்ளும்... என்னென்ன தெரியுமா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகைளையும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது தான் சாணக்கிய நீதி நூல்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.
சாணக்கிய நீதியில் வாழ்ககைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் எல்லா பருவங்களிலும் மனிதர்கள் கடந்து வர வேண்டிய சவால்கள் பற்றிய விளக்கம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு மனிதன் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கருவிலேயே கற்றுக்கொள்ளும் குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் கருவில் இருக்கும்போதே குழந்தைகள் தானம் செய்யும் குணத்தை பெற்றுக்கொள்வார்கள். இந்த குணத்தை பூமியில் பிறந்த பின்னர் நிச்சயம் பெறவே முடியாது என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனப்பான்மை இருந்தால், மட்டுமே குழந்தைகளிடம் அந்த பழக்கத்தை எதிர்ப்பார்க்க முடியும் என்கின்றார் சாணக்கியர்.
அவர்கள் வளரும்போது தானம் செய்யும் குணம் மேலும் விருத்தியடையுமே தவிர ஒருபோதும் பிறந்த பின்னர் இந்த குணத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது. அது ஆத்மார்த்தமான உள்ளுணர்வுகளுடன் தொடப்புயைது என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை அவர்களின் மரபணுக்களிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றார்கள். அப்படி கருவில் இருக்கும் போதே உருவாகும் குணம் தான் நமது பேசும் தொனி.
பெற்றோர்கள் நல்லவர்களாகவும், இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் இந்த பழக்கம் கருவில் இருக்கும் போதே குழந்தைக்கும் தொற்றிக்கொள்ளும்.
குழந்தைகளின் அடிப்படை தன்மையை பிறந்த பின்னர் மாற்றியடைக்க முடியாது. அது தாயின் வயிற்றில் இருந்தே கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே பொறுமையை கற்றுக்கொள்கின்றார்கள்.
பெரியர்களானதும் அவர்கள் பொறுமையாகவும் தெளிவாகவும் நடந்துக்கொள்கின்றார்கள் என்றால், தாயின் கருவில் இருக்கும் போது இந்த குணங்களுடன் தாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கிய நீதி படி, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே மற்றவர்களுக்கு தீங்கு செய்ய கூடாது. மற்றவர்களை துன்புறுத்தி மகிழ்ச்சியடைய கூடாது போன்ற சிறந்த குணங்களையும் நேர்மை தன்மையையும் கற்றுக்கொள்கின்றது.
பூமியில் பிறந்த பின்னர் இந்த குணங்களை கற்றுக்கொள்ள நினைத்ததாலும் முடியாது. இந்த பழக்கங்கள் கருவில் இருக்கும் போதே தொற்றிக்கொள்கின்றன என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |