ஆபத்தில் முடியும் Screen Time- குழந்தைகளுக்கு இதய நோய் எச்சரிக்கை!
பொதுவாக நமது வீடுகளில் உள்ள குழந்தைகள் வயது வர வர மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள்.
அதில், படம் பார்ப்பது, கேம் விளையாடுவது மற்றும் ரீல்ஸ் பார்ப்பது போன்ற வேலைகளை விருப்பத்துடன் செய்வார்கள். உண்மையில் குழந்தைகளுக்கு இப்படியான சாதனங்களை பயன்படுத்தக் கொடுப்பது நல்லதா? கெட்டதா? என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கும்.
இது பற்றிய ஆய்வில், குழந்தைகள் அதிகமாக தொலைபேசிகளை பயன்படுத்து பொழுது அவர்கள் இதய நோய் ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்கள், தொலைக்காட்சிகள் அல்லது கன்சோல்கள் இவற்றில் எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் செல்லும் பொழுது உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்ற இதய வளர்சிதை மாற்றப் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், குழந்தைகளின் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாடு அதிகமான வேறு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை எமது பதிவில் பார்க்கலாம்.
இதய நோய் எச்சரிக்கை
ஆய்வுகளின்படி, 2 முதல் 19 வயதுக்குட்பட்ட அமெரிக்க குழந்தைகள் மற்றும் டீனேஜர்களில் 29% மட்டுமே ஆரோக்கியமான கார்டியோமெட்டபாலிக் ப்ரொஃபைலை கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு காரணங்களால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறுவயதிலேயே இவர்களுக்கு இதய மற்றும் வளர்சிதை மாற்ற அபாயங்கள் ஏற்படும்.
டென்மார்க்கில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கும் அதிகமான ஸ்கிரீன் டைமிங் தான் காரணம். இதை தவிர்த்து டைப் 2 நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு உள்ளிட்ட நோய்களும் அதிகரிக்கும்.
இது போன்ற நோய்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க நினைப்பவர்கள் இளம் பருவத்தில் ஸ்கிரீன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இது உங்கள் குழந்தைகளின் இதயம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் கூடுதலாக ஸ்கிரீன் டைமிங்கை அதிகப்படுத்தினால் குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட பாதிப்புக்கள் வர வாய்ப்பு உள்ளது.
போதுமான அளவு ஓய்வு குழந்தைகளின் வளர்ச்சியையும் அவர்களின் செயல்களையும் ஊக்கப்படுத்தும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
1. குழந்தைகளின் ஸ்கிரீன் டைமிங்கை குறிப்பிட்ட நேரத்திற்கு குறைக்க வேண்டும். இந்தவொரு மாற்றம் உங்கள் குழந்தைகளை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்.
2. சாப்பிடும் நேரங்கள் அல்லது தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் டிஜிட்டல் ஸ்கிரீனை கட்டுப்படுத்த வேண்டும்.
3. மாலை நேரத்தில் நடைப்பயிற்சி, விளையாட்டு அல்லது சிறிய வெளிப்புற விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இயற்கையுடன் அதிகமான நேரத்தை செலவிடும் பொழுது உங்கள் குழந்தைகள் அதிகமான விடயங்களை கற்றுக் கொள்வார்கள்.
4. சில வீடுகளில் படுக்கையறைகளில் டிஜிட்டல் ஸ்கிரீன் வைத்திருப்பார்கள். இது குழந்தைகளின் தூக்கத்தை குறைக்கும். இந்த பழக்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முன்னர் தாய்மார்கள் ஜிட்டல் ஸ்கிரீனை படுக்கையறையில் இருந்து எடுக்க வேண்டும்.
5. புத்தகம் படிப்பது, சமைப்பது போன்ற வீட்டு வேலைகளில் குழந்தைகளை கவனம் செலுத்த வேண்டும். சிறந்த பழக்கங்களை சிறுவயது முதல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |