இசைப்புயலுக்கு சிஷ்யையாக மாறிய சுட்டிக்குழந்தை! ஒற்றை விரலில் வித்தை காட்டிய அற்புதம்
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடலை சுமார் மூன்று வயது குழந்தையொருவர் கீ-போர்டில் வாசித்து காட்டி இணையத்தையே திணற விட்டுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் பாடல்கள்
பொதுவாக பாடல் என்றாலே ஏ.ஆர் ரஹ்மான் தான் ஞாபகத்திற்கு வரும் அந்தளவிற்கு இளைஞர் தொடக்கம் முதியவர் வரை பட்டிதொட்டியெங்கும் பிரல்யமான ஒரு இசைமைப்பாளர்.
இவரின் பாடல்கள் மனதிற்கு காதிற்கும் இனிமையளித்து எத்தனை காலங்களானாலும் மறையாத செதுக்கங்களாக ஒவ்வொருவரின் மனதில் பதிந்துள்ளது.
சிறுமியின் அசத்தலான பதிவு
சுமார் மூன்று அல்லது நான்கு வயது மதிக்கதக்க பெண் குழந்தையொன்று “ரோஜவே” திரைப்படத்திலுள்ள “காதல் ரோஜவே...” என்ற பாடலை கீ- போர்டில் வாசித்துக் காட்டியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அவருடைய பெற்றோர் ரஹ்மானிடம் காட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீடியோவை பார்த்து மிரண்டு போன ஏ.ஆர் ரஹ்மான் “எங்களின் 90-களின் காதல் பாடல்கள் இன்றைய தாலாட்டு பாடல்கள்” எனக் குறிப்பிட்டு அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.