என்னையா கடிக்கிற? பாம்பை பழிக்கு பழி வாங்கிய குழந்தை! துருக்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
2 வயது சிறுமி பாம்பு தன்னை கடித்ததாக மீண்டும் அந்த பாம்பை பிடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
துருக்கி நாட்டின் காந்தார் கிராமத்தை சேர்ந்தவர் மெஹ்மத் எர்கான். இவரின் 2 வயது பெண் சிறுமி அண்மையில் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்துள்ளது.
அப்போது அந்த குழந்தையை பாம்பு ஒன்று கடித்து அதனால் சிறுமி அலறுவதையும் பக்கத்து வீட்டார்கள் கண்டுள்ளனர்.

பாம்பை கடித்த சிறுமி
பின் பதறியடித்து குழந்தையை நோக்கி செல்ல, சிறுமியின் பற்களுக்கு இடையே பாம்பை கடித்து துப்பியதை அவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமிக்கு பாதிப்பு இல்லை
இதனிடையே அந்த குழந்தையின் கீழ் உதட்டை பாம்பு கடித்திருந்தாலும் 24 மணிநேரத்திற்குள் சிறுமி குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி கடித்ததில் அந்த பாம்பும் உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து பக்கத்துவீட்டினர்கள் தெரிவிக்கையில், 20 அங்குலம் உடைய பாம்பை சிறுமி கையில் பிடித்தப்படி தனது வாயால் கடித்து கொண்டிருந்ததாகவும், பின் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், துருக்கியில் 45 வகையான பாம்புகளில் 12 விஷத்தன்மை கொண்டவை என கூறப்படுகிறது. தற்போது குழந்தை நலமாக இருப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.