2 ஆண்டுகளாக காணாமல் போன சிறுமி! படிக்கட்டின் கீழ் கண்டுப்பிடித்த போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்;
2 ஆண்டுகளாக காணாமல் போன சிறுமியை வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூயார்க்கில், கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். பின்னர் தேடிவந்த போலீசார், தற்போது சிறுமி அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் உள்ள ரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
மேலும், குழந்தையை தங்களிடமே இருக்க வேண்டும் என பெற்றோர் கோரி வந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளாக ஒரு ரகசிய மறைவிடத்தில் மறைத்து வைத்திருநந்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை சீராகவே உள்ளது என்றும் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர்கள் தெரிவிக்கையில், வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் இருந்து, பைஸ்லி ஷுல்டிஸ் என்ற ஆறு வயது சிறுமி மீட்டகப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், சம்பந்தப்பட்ட வேறு சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.