சாக்லேட் சாப்பிட்ட 4 வயது சிறுவன்! துடிதுடித்து பலியான சோகம்
4 வயது குழந்தை ஒன்று சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்
உத்தரபிரதேசத்தின் கிரேட் நொய்டாவில் ரபுபுரா பகுதியில் உள்ள கடை ஒன்றில் நான்கு வயது குழந்தை ஒன்று சாக்லேட் வாங்கி சாப்பிட்டுள்ளது.
திடீரென சாக்லேட் மூச்சுக்குழாய்க்குள் சென்றதால் மூச்சுவிட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே குழந்தையின் பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்ற போதும் குறித்த சிறுவன் பேச முடியாமல், தவித்ததுடன் இடைவிடாமல் அழுது தனது வலியை வெளிப்படுத்தியுள்ளான்.
மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.