மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிய 6 வயது சிறுமி: இளைஞர் செய்த கேவலமான காரியம்
கேரளாவில் ஆறு வயது சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு, மயக்கத்தில் இருந்த சிறுமி தூக்குபோட்டு கொலை செய்த வாலிபரை கைது செய்த பொலிசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அடுத்த சுரக்குளத்தில் வசித்து வருபவர் அர்ஜூன்(29).
தேயிலை தோட்டத் தொழிலாளியான இவர் கடந்த மாதம் 30ம் தேதி சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் வீட்டு பக்கத்தில் மற்றொரு தேயிலை தோட்ட தொழிலாளிக்கு தற்போது 6 வயது மகள் இருந்துள்ளார். இந்த குழந்தை 3 வயதிலிருக்கும் போது, தந்தை வேலைக்கு சென்ற பின்னர் வீட்டிற்கு வந்து மிட்டாய், பிஸ்கட் வாங்கிக்கொடுத்து அர்ஜுன் சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி சிறுமியை வன்கொடுமை செய்த போது மயங்கிவிழுந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்த அர்ஜுன், குழந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று நம்ப வைப்பதற்கு வாழைத்தார் கட்டும் கயிற்றினை எடுத்து சிறுமியினை கட்டி தொங்கவிட்டுள்ளார்.
சிறுமியின் கயிற்றில் கயிறு இறுக்கியதும், அவர் மயக்கம் தெளிந்து மூச்சுத்திணறி தனது கை, கால்களை அசைத்து உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் சிறுமி துடிதுடித்து இறக்கும் வரை இளைஙர் அங்கே நின்றுவிட்டு பின்பு உட்புறமாக கதவை தாழ்பாழ் போட்டுவிட்டு ஜன்னல் வழியாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
பின்பு சிறுமியின் இறுதிச்சடங்கில் சோகமாக நின்று நடித்து அங்கிருந்தவர்களை நம்பவைத்து கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் பொலிசார் 6 வயது சிறுமி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால் இதுகொலை தான் என்று தீர்மானத்து, பிரேத பரிசோதனைக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, பொலிசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது அர்ஜுனுக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவரை பொலிசார் விசாரித்துள்ளனர்.
அவரது மொபைல் போனில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததையும் அவதானித்த பொலிசார், தனது பாணியில் விசாரணை மேற்கொண்ட போது அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.
