மூகாம்பிகைக்கு CM விஜய் கொடுத்த காணிக்கை - என்ன கொடுத்தார் தெரியுமா?
முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் விஜய்
உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
கர்நாடகம் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுமட்டுமன்றி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர்.
இன்னும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி சென்று ஆன்மீக வழிபாடு செய்து வருவார்களாம்.

முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தை முடித்த பின்னர் டெல்லியில் தங்கி இருந்த விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் புறப்பட்டார்.
அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், சுமார் 2.5 அடி நீளத்தில் ஒரு கிலோ எடையுள்ள தங்க வாளை கோயிலுக்கு உபயமாக வழங்கினார்.
இன்றும் அந்தத் தங்க வாள் கோயிலின் கருவறையில் பாதுகாக்கப்பட்டு, விசேஷ நாட்களில் அம்மனுக்கு அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடந்த 2004ஆம் ஆண்டு அரசியல் வெற்றிகளுக்காக பிரம்மாண்ட சண்டிகா யாகம் நடத்தினார்.
அந்த வரிசையில் தற்போது முதலமைச்சர் விஜய் வெள்ளி வாளை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |