Tomato pachadi :கிராமத்து பாணியில் அசத்தல் தக்காளி பச்சடி... எப்படி செய்வது?
பொதுவாகவே இட்லி தேசைக்கு தொட்டுக்கொள்ள அனைவரினதும் முதல் தெரிவு தக்காளி சட்னி தான். தக்காளியில் செய்யப்படும் அனைத்து உணவுகளுமே தனித்துவமான சுவையை பெற்றுவிடும்.
ஆனால் எப்போதும் தக்காளியை வைத்து சட்னி மற்றும் குழப்பு செய்வது தான் வழக்கம்.
ஒரு முறை சற்று வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தக்காளி பச்சடியை கிராமத்து பாணியில் மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
மஞ்சள்தூள்
பழுத்த தக்காளி
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
கருவேப்பில்லை
சாம்பார் பொடி
உப்பு
மல்லித்தழை
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
செய்முறை
முதலில் தக்காளியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலில் வேகவிட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி ஆகியவற்றையும் சேர்த்து வேகவிட வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்க வேண்டும்.
கொதித்ததும் இறுதியில் நறுக்கிய மல்லித் தழையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த தக்காளி பச்சடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |