ருசியான சிக்கன் கீமா புலாவ் செய்து பார்ப்போமா?
அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்களில் சிக்கனும் ஒன்று. காரணம் அதன் சுவை.
அப்படிப்பட்ட சிக்கனை விதவிதமாக சமைத்து உண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
சிக்கனை வைத்து சிக்கன் கீமா புலாவ் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி - 1கப்
- சிக்கன் கீமா - 250 கிராம்
- எண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - 1/2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் என்பவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன்பின்பு ஒரு தடிமனான பாத்திரத்தில் எண்ணெய்/நெய்யை ஊற்றி சூடாக்கி பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் கீமா, உருளைக்கிழங்கு,பட்டாணி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி நிலைக்கு வந்ததும் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து குறைவான தீயில் 18 நிமிடங்கள் வரை விடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.