சிக்கனின் இந்த பகுதி மிகவும் ஆபத்தானதாம்... இனிமே இதனை சாப்பிடாதீங்க
உலகத்தில் அசைவ பிரியர்களால் அதிகமாக உண்ணப்படும் சிக்கனின் எந்த பகுதியை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆபத்தை விளைவிக்கும் சிக்கன்
அசைவ பிரியர்களின் முதல் தெரிவாக இருக்கும் சிக்கனில் அதிக அளவு புரோட்டீன் சத்து காணப்படுகின்றது. ஆனால் சிக்கன் வாங்கும் போது அது தரமானதா என்பதை சோதித்து வாங்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு சோதித்து வாங்கும் கோழியிலும் ஒரு பகுதி மட்டும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.
எந்த பகுதியை சாப்பிடக்கூடாது?
ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயணங்கள் நுழைந்தால் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு என்றால் கல்லீரல் ஆகும். ஆனால் இந்த கல்லீரலை தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
அதே போன்று கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இவற்றினை கொண்டுள்ள தோல் பகுதியில் சத்து எதுவும் கிடையாதாம். இது பயனற்ற பகுதியாக கருதப்படுகின்றது.
ஆதலால் சாப்பிடும் முன்பே தோலை அகற்ற வேண்டும். இவை ரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றது.
மேலும் தோலை அகற்றி சமைத்த கோழி இறைச்சியில் 231 கலோரிகளும், தோலுடன் இருக்கும் சிக்கனில் 276 கலோரிகள் உள்ளது தெரியவந்துள்ளது.
இதே போன்று இறக்கைகள் சாப்பிடுவதும் சில ஆபத்துக்களை ஏற்படுத்தும். ஆதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |