அருமையான சிக்கன் ஆம்லெட் செய்து பார்க்கலாம் வாங்க...
சிக்கன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
அதுவும் வித்தியாசமான முறையில் சிக்கன் ஆம்லேட் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் கொத்துக்கறி கறி மசாலா - 100 கிராம்
முட்டை - 3
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
image - cookpad.com
செய்முறை
முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் கொத்துக்கறி மசாலாவில் உள்ள சிக்கனை பிய்த்து வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், நறுக்கிய வெங்காயம், முட்டை சேர்த்து கலக்கி, பின்னர் இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
அதற்கடுத்ததாக, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
பின்னர் அளவான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும். பிறகு அதில் பிய்த்து வைத்துள்ள சிக்கனை எடுத்து முட்டையின் மேல் தூவி மூடி, 1 நிமிடம் வேகவிட்டு திருப்பி போட்டு வேகவிடவும்.
அருமையான சிக்கன் ஆம்லெட் ரெடி.
image - BBC