மொறு மொறுனு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் எப்படி செய்வது ? ரெசிபி இதோ
மாலை நேரங்களில் எமது நாக்கு எதாவது ஒரு சுவையான ஸ்நாக் தேடி செல்கிறது. இந்த நேரத்தில் நாம் பல வகையான ஸ்நாகுக்களை உண்ண ஆசைப்படுவோம்.
ஆனால் பெயரே மிகவும் வித்தியாசமாக உள்ள நூடுல்ஸ் கட்லெட் இந்த ஸ்நாக்கை பெரியவர்கள் தொடக்கம் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
இதை நீங்கள் சாஸ் சட்டினி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேகவைத்த நூடுல்ஸ் - 2 கப்
- வேகவைத்த சிக்கன்- ஒரு கப்
- ரொட்டித்தூள் - அரை கப்
- சீஸ்- ஒரு கப்
- சின்ன வெங்காயம்- ஒரு கப்
- நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்
- பூண்டு- ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு
- கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்
- கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்
- சாட் மசாலா- ஒரு ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்
- சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
- முட்டை-1
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த நூடுல்ஸை எடுத்து கொள்ள வேண்டும்.
அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா,
கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை செய்து எடுத்து கொள்ளலாம்.
பின்னர் உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். இதன் பின்னர் பொன்னிறம் வரும் வரை கட்லெட்டை பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |