யாரும் சாப்பிட்டுராத சிக்கன் கொத்து இடியாப்பம் - சுவையாக உடனே செய்வது எப்படி?
இடியாப்பம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது அதுவும் இடியாப்பத்துடன், வடகறி குழம்பை சாப்பிடுவர்கள் ஏராளம்.
இடியாப்பத்தில் பலவகையான ரெசிபிகளை செய்யமுடியும். அந்த வகையில், பலரும் சாப்பிடாத சிக்கன் கொத்து இடியாப்பம் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் - 4
எலும்பு இல்லாத சிக்கன் - 100 கிராம்
சிக்கன் கிரேவி - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 1
முட்டை - 2
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - கொஞ்சமாக
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில் இடியாப்பத்தை எடுத்துக்கொண்டு நன்றாக உதிர்த்து கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
நறுக்கிய சிக்கனை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். கடாயை கொண்டு நெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள் போட்டு நன்றாக கிளறவும்.
தொடர்ந்து நறுக்கி சுத்தம் செய்து வைத்திருந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்றாக வதங்க அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி கிளறவும். இந்த கலவை வதங்கியதும், அடுத்து அதில் சிக்கன் கிரேவியை ஊற்றி கிளறவும்.
இது கொஞ்சம் வதங்கியதும், உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து பதமாக கிளறவும்.
கடைசியாக மசாலா நன்றாக சேர்ந்தவுடன் கொத்தமல்லி தழை துவி இறக்கி வைத்தால் சுவையான சிக்கன் கொத்து இடியாப்பம் ரெடி....!