மீதமுள்ள சாதத்தில் சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
மதியம் சமைத்த சாதம் அதிகமாகி விட்டது என சிலர் வீடுகளில் கவலையாக இருப்பார்கள். அதனை என்ன செய்யலாம் என்ற பல வழிகளில் சிந்தனை போகும்.
அப்படி வீடுகளில் மீதமாகி விட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு ப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். கடையில் சிக்கனை வாங்கி வந்து, அதை 65 போன்று செய்து அதனுடன் சாதம் சேர்த்து கிளறினால் வீட்டிலுள்ள விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், மீந்து போன சாதம் கொண்டு சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- சோள மாவு - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)
- கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
- முட்டைக்கோஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)
- குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - சுவைக்கேற்ப
- மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 சிட்டிகை
- முட்டை - 2
- மீந்து போன சாதம் - 1 கப்
- மிளகுத் தூள் - 1 1/4 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
முதலில் எலும்பில்லாத சிக்கனை கழுவி அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சோள மாவு, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகிய பொருட்களை போட்டு, நன்றாக கிளறி விட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
30 நிமிடத்திற்கு பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு தீயில் வைத்து 10 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
அதன் பின்னர், சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்தப்படியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு காய்கறிகள் வேக விடவும். காய்கறி வதங்கியவுடன் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதங்க விடவும்.
அதற்கு குள் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி நன்கு நன்கு கிளறவும்.
முட்டை வெந்தவுடன் அதில் மீந்து போன சாதம், ப்ரை செய்து வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், சோயா சாஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி 5 நிமிடம் தீயில் வைத்து இறக்கினார் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |