கேரள ஸ்டைல் நாடான் கோழிக்கறி... எப்படி செய்வது தெரியுமா?
கோழிக்கறி சமையலில் பல வகைகள் உள்ளது. இவற்றில் ஒரு வகை தான் நாடான் கோழிக்கறி. இந்த அற்புதமான சைடிஷ்யை ஒரு முறை ருசித்தவர்கள் நிச்சயம் அடிக்கடி உண்ண வேண்டும் என நினைப்பார்கள்.
அந்த அளவிற்கு சுவையும் மணமும் உள்ள நாடான் கோழிக்கறியை எப்படி கேரளா ஸ்டைலில் சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- பட்டை – 2
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 3
- பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
- சின்ன வெங்காயம் – 7 (பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 5, 6 (நடுவில் கீறியது)
- கருவேப்பிலை – 2 கொத்து தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- மசாலா மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு தூள் – 1/2 டீ ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/4 டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – சிறிதளவு
- மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
- சிக்கன் – 1கிலோ
- தேங்காய் பால் – 1 1/2 கப்
- தாளிப்பு – 2 தேங்காய் எண்ணெய் காய்ந்த மிளகாய் – 1 (கிள்ளியது) சின்ன வெங்காயம் – 3 கருவேப்பிலை
செய்முறை
முதலில் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.. நன்கு வதக்கிய பிறகு சில நிமிடங்களுக்கு மூடி வைத்து மூடிக்கொள்ளவும்.
தக்காளி நன்கு மசிந்து வந்த பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பச்சை நீங்கும் வரை கிளறிக்கொள்ளவும். அதன் பிறகு மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
தொடர்ந்து இந்த மசாலாவுடன் நன்கு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 நிமிடங்களுக்கு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின்னர் சில நிமிடங்களுக்கு மூடியால் மூடி வேக விடவும். பின்னர், தேங்காய் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து மூடியால் மூடி கொதிக்க விடவும்.
கறி நன்கு வெந்து வந்த பிறகு அவற்றோடு முன்னர் தயார் செய்து வைத்துள்ள தாளிப்பு 2-யை சேர்த்து மிக்ஸ் செய்து பரிமாறவும்.
இந்த அருமையான சைடிஷ்யை உங்கள் விருப்பமான உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதோடு, இந்த வீக் எண்ட்க்கு உணவுவாக சுவைக்கவும்.