ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட்
நடிகர் சூர்யாவால் நடிகை அசின் ஒதுக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நடிகை அசின்
தமில் சினிமாவில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைவை சேர்ந்த இவர் இவர் இப்படத்தில் மலையாளப் பெண்ணாக நடித்து முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
அந்த படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதன் பின்னர் அசினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார்.
அசினின் நடிப்பு திறமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக கஜினி படம் அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவும் அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியிலும் ஆமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹிந்தி திரையுலகில் உச்சத்தில் இருந்தார்.
இதனிடையே 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அசினுக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அசின் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் “ சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க முதலில் அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் என்றும், அதில் அசினுக்கு ஐஷு என்ற கேரக்டர் என்றும் கூறினார்கள். ஆனால் அசினோ தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கேரக்டர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் படக்குழுவினர், அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் அசினோ குந்தவை கேரக்டர் என்றால் நடிக்கிறேன், மற்ற கேரக்டர் என்றால் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார்.
அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா உறுதியாக இருந்ததால் அதில் அசின் நடிக்கவில்லை. அதன்பிறகே அதில் பூமிகா நடித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |