பிக்பாஸ் அர்ச்சனா பற்றி பலரும் அறியாத சீக்ரெட்.. செய்யாறு பாலு பளீச்
பிக்பாஸ் அர்ச்சனா பற்றி பலரும் அறியாத ஒரு விடயத்தை செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.
விஜே அர்ச்சனா
இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இடம்பெறவுள்ளது.
இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
இதில் முக்கிய போட்டியாளராக இருந்து வரும் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றது.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த பின்னர் இந்த சீசன் எப்படி இருக்க போகின்றது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தை தன்வசப்படுத்தியவர் தான் அர்ச்சனா.
இவர் பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானார். பின்னர் நடிகர் கலையரசனின் மனைவியின் ஜவுளி கடைக்கு சென்ற போது கலையரசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த புகைப்படத்தின் மூலம் அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி படிப்படியாக பிரபலமாகி தற்போது டைட்டில் வின்னர் பட்டத்திற்கு தகுதியானவராக மாறி நிற்கிறார்.
செய்யாறு பாலு பகிர்ந்த ரகசியம்
இந்த நிலையில் அர்ச்சனா குறித்து ஒரு புதிய தகவலை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது,“ இந்த அர்ச்சனா யாருனா?... சுமாராக 2 ஆண்டுக்கு முன்னர் வைரமுத்துவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். புகைப்படத்தில் அர்ச்சனாவின் தலையில் வைரமுத்து கை வைத்து ஆசீர்வதிப்பது போல் இருக்கிறார்.
இந்த புகைப்படம் வெளியான போது பிரபல பாடகி சின்மயி, “அவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும். வைரமுத்துவை பார்க்க செல்லும் போது தனியாக செல்ல வேண்டாம்..” என எச்சரித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சின்மயி பதிவு செய்த கருத்தை டெலிட் செய்த அர்ச்சனா, “ நான் இந்த பதிவை போட்டதற்கு முக்கிய காரணம் என் தந்தை தமிழ் பேராசிரியர். எங்களுடைய குடும்பம் தமிழ் பற்று கொண்டது. வைரமுத்துவின் பாடல் குடும்பத்தினருக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேசுவார்கள். இப்படியான நேரங்களில் ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது.
இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட். இதை புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும் என சின்மயின் கருத்து பதில் கருத்து கொடுத்துள்ளார்.” இந்த விடயத்தை செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |