சுவிங்கம் மென்றால் 2 ஆண்டு சிறை தண்டனையாம்? எந்த நாட்டில் தெரியுமா?
சிங்கப்பூரில் இருக்கும் விசித்திர தண்டனை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மிக சிறிய நாடான சிங்கப்பூரில் எல்லா இடங்களும் சுத்தமாக இருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ .
அவர் அந்நாட்டை சுத்தமாக வைத்திருக்க பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தார். அந்த சட்டங்களில் ஒன்று தான் சுவிங்கம் விற்பனையை தடை செய்வது.

ஒருவர் சுவிங்கம் சாப்பிட்டு விட்டு அதை தெரு, ரோடு என பொது இடங்களில் துப்புகிறார்.
அதனால் சுவிங்கம் அந்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த தடை நாடே சுத்தமானது.
இருந்தாலும் கடந்த 2004ம் ஆண்டு இந்த சட்டம் மீண்டும் பரிசிலீக்கப்பட்டது.

அதன்படி சுவிங்கம் சிலரது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் அதன் மீதான தடை நீக்கப்பட்டது.
அதே நேரத்தில் மருத்துவ குணமுள்ள சுவிங்கம், பல் மருத்துவத்திற்கு தேவையான சுவிங்கம், நிக்கோட்டின் சுவிங்கம், ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் அந்த உரிய அனுமதியின்றி சுவிங்கத்தை மென்றாலோ அல்லது பொது இடத்தில் துப்பினாலோ அவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இந்திய பண மதிப்பில் ரூ74 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதம் முதன் முறைக்கு மட்டுமே மீண்டும் அதே தவறை செய்தால் ரூ1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கின்றது.