நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? காலை வெறும் வயிற்றில் இந்த இலை சாப்பிடுங்க
நீரிழிவு நோய் தற்போது இருக்கும் சமூகத்தின் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடலில் இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகும்போது உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் இந்த நோய் உண்டாகும்.
நீரிழிவு நோயால் உடல் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, சரியான நேரத்தில் இதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இதற்கேற்றவகையில் உணவு எடுத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். அப்படி ஒரு வீட்டு வைத்தியம் தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.
நீரிழிவு நோய்க்கு வில்வ இலைகள்
வில்வ இலைகள் ஆரோக்கியத்திற்கு அற்புதமானதாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி6 காணப்படுகின்றன. இது தவிர, கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றது.
வில்வ இலைகளை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். ஆனால் நீரிழிவு நோயாளர்கள் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதே சிறந்த வழி. மென்று சாப்பிடுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தால், அதை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் நீரிழிவு நோயை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். இது தொற்று நோய் இல்லை. காலையில் எழுந்தவுடன் தினமும் இரண்டு வில்வ இலைகளை எடுத்து உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |