குரு பகவான் வீட்டில் அடாவடிதனமாய் அமரும் செவ்வாய் - எந்த ராசிகளுக்கு ஜாக்பட்?
டிசம்பர் 7, 2025 செவ்வாய் பகவான் தனுசு ராசிக்கு செல்கிறார் இது குறித்து ஐந்து ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகின்றது.
செவ்வாய் பெயர்ச்சி 2025
ஜோதிடக் கணிப்பின்படி, செவ்வாய் பகவான் ஒவ்வொரு ராசியிலும் சராசரியாக 45 நாட்கள் தங்கிச் சஞ்சரிப்பார். ஆற்றல், தைரியம், உறுதி, துணிவு மற்றும் செயல்பாட்டின் அதிபதியாக அவர் விளங்குகிறார்.
வருகிற டிசம்பர் 7, 2025 அன்று, தனது சொந்த ராசியான விருச்சிகத்திலிருந்து, குரு பகவானின் சொந்த ராசியான தனுசுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார்.
அடுத்து ஜனவரி 16, 2026 வரை தனுசு ராசியிலேயே இருப்பார். செவ்வாய் இந்தப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிறப்பு அதிர்ஷ்டமும் சாதகப்பலன்களும் தந்து பயனளிக்க உள்ளது. எந்தெந்த ராசிகள் அந்த பலனைப் பெறப்போகின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறார்.
- இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும்.
- நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் உங்களை வந்து சேரும்.
- உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள்.
- சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
- இதனால் நிதி முதலீடுகளில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- பணியிடத்தில் தலைமைப் பண்புகள் வெளிகாட்டுவீர்கள்.
தனுசு
- தனுசு ராசிக்கு செவ்வாய் பகவான் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
- இதனால் உங்கள் தைரியமும், ஆற்றலும் பன்மடங்கு அதிகரிக்கும்.
- துணிச்சலாக செயல்பட்டு எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் முடித்து வெற்றியைப் வசப்படுத்துவீர்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
- பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
- சொத்துக்கள் வாங்குவீர்கள்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் பதினோராவது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
- இது எல்லா துறைகளிலும் உங்களுக்கு பலன்கள் வழங்கும் காலமாக அமையும்.
- முன்னதாக செய்திருந்த முதலீடுகளிலிருந்து சிறந்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதோடு, வணிகத்தை விரிவாக்கும் சந்தர்ப்பங்களும் உருவாகலாம்.
- உங்கள் கடின உழைப்பிற்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்.
மீனம்
- மீன ராசிக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார்.
- எனவே இது தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தைத் தரும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணி மற்றும் அதிகார பலம் அதிகரிக்கும்.
- பணி காரணமாக விரும்பிய இடமாற்றம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.
- உங்களின் கடின உழைப்பால் அனைத்து வேலைகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).