ஆரம்பமாகவுள்ள செவ்வாய்ப்பெயர்ச்சி: காத்திருந்த அதிஷ்டம் கைகூடும் 4 ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.
இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்த வரிசையில் இந்த ஆண்டின் செவ்வாய் பெயர்ச்சிப் பற்றியும், இந்த ஆண்டில் ஆதிக்கம் செய்யவுள்ள செவ்வாய் எந்த ராசியில் என்ன பலன்களை கொண்டு வந்திருக்கிறார் என்று பார்க்கலாம்.
செவ்வாய் பெயர்ச்சி 2023
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இவரின் இடப்பெயர்ச்சியால் சுப பலன்களை 4 ராசிக்காரர்கள் பெறப்போகிறார்கள்.
கடக ராசிக்குள் செல்லும் செவ்வாய் பகவான் மே 10ஆம் திகதி பகல் 1.44 மணியிலிருந்து ஜுலை 1ஆம் திகதி அதிகாலை 1.52 வரை கடகராசியில் இருப்பார். அதற்குப் பின்னர் சிம்மராசியில் நுழையவுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் பலன்களை 4 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவார்கள்.
மேஷம்
செவ்வாய் பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்கள் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் திருமணம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் உங்கள் தொழில் சிறக்கும். பெற்றோரிடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்தால் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் வாங்கலாம். வீடுகளில் அமைதியான சூழல் நிலவும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு செவ்வாய் 11ஆவது இடத்தில் இருப்பதால் தடைப்பட்ட பணிகள் எல்லாம் கச்சிதமாக நிறைவேறும். பண பலம் அதிகமாக காணப்படும். நிதிப்பிரச்சினை இல்லாமல் போகும் செலவுகள் குறையும். நிதி பிரச்சினைகள் இல்லாமல் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல இலாபம் பார்ப்பீர்கள். எதிரிகளிடம் கடுமையாக நடந்துக் கொள்ள நேரிடும்.
கும்பம்
இந்த செவ்வாய்ப்பெயர்ச்சியானது கும்பராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். எல்லாத் துறைகளிலும் வெற்றிப் பெறுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் சிறந்து விளங்குவீர்கள், பாராட்டப்படுவீர்கள். தொழிலால் அதிக வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும். காதல் உறவிலும் திருமண வாழ்க்கையிலும் அதிக நெருக்கத்தைக் கொண்டுவரும்.
மீனம்
செவ்வாய்ப் பெயர்ச்சியானது மீனராசிக்கு 5ஆவது இடத்தில் இருக்கிறார். அதனால் அதிக அதிஷ்டத்தை கொடுக்கும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் கைக் கூடும். பரீட்சை தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பணி செய்யும் உங்கள் செயல்கள் பாராட்டப்படும். உங்கள் முயற்சிகளுக்கு அதிக பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். தாய் வழியில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.