அடுத்த 20 நாள் காத்திருக்கும் ஆபத்து.... செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிக்கும் ஏற்படும் அதிரடி மாற்றம்!

Horoscope
By Nivetha Jun 13, 2022 11:26 PM GMT
Report

வரும் 27ஆம்தேதி முதல் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் செவ்வாய் பகவான்.

மேஷ ராசியில் ராகு உடன் இணையும் செவ்வாயினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

 உங்களின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம். அதேசமயம் பத்திரங்களை வில்லங்கம் சரிபார்த்து வாங்கவும். இல்லாவிட்டால் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. உங்களின் ஆளுமைத்திறனால் மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள்.

ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால் மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை.

நல்ல காலம் பிறந்து விட்டது வெள்ளி நடைபோடுங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

அடுத்த 20 நாள் காத்திருக்கும் ஆபத்து.... செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிக்கும் ஏற்படும் அதிரடி மாற்றம்! | Chevvai Peyarchi 2022

ரிஷபம்

 உங்கள் ராசிக்கு 12ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை நான்காம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய்.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை ஏழாம் பார்வையாக பார்ப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

வங்கிகளில் லோன் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கூடும். உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை.

மிதுனம்

அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான். உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும்.

முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். செவ்வாய்கிழமையன்று சிவப்பு நிற மலர்களால் அனுமன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம்.

செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்து ருச்சிக யோகம் தரப்போகிறார் செவ்வாய் பகவான்.

வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும்.

அடுத்த 20 நாள் காத்திருக்கும் ஆபத்து.... செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிக்கும் ஏற்படும் அதிரடி மாற்றம்! | Chevvai Peyarchi 2022

பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள். அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்வது சிறப்பு. பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம்.

பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அப்பாவின் உதவியும் அப்பா வழி உறவினர்களின் உதவியும் தேடி வரும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும்.

உங்கள் வாழ்க்கைத்துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். காதல் மலரும் காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

கன்னி

செவ்வாய் பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். வாகன பயணங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும். எங்கும் எதிலும் திருப்தி இருக்காது. வேலை செய்யும் இடத்தில் கடுமையாக உழைக்க நேரிடும். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். பணம் வரும் வாய்ப்பு ஏற்படும்.

அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். குடும்ப உறவுகள் வலுவடையும். மாமனார் மாமியாருடன் நெருக்கம் கூடும். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிறு சிறு விபத்துகள் ஏற்படும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும்.

துலாம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் செவ்வாய் அமர்வது ருச்சிக ராஜயோகம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

பார்த்த வரன் வெற்றிகரமாக முடியும். காதல் வாழ்க்கை கல்யாணத்தில் முடியும் உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். நேரம் சரியில்லை. சண்டை வரலாம். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைகிறார். இதுவும் செவ்வாயின் வீடுதான் இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையைத் தரும். விபரீத ராஜயோகம் கிடைக்கும். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும்.

பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்வதால் உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும்.

செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

தனுசு

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்கிறார்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் செவ்வாயினால் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. மாணவர்களுக்கு நல்ல காலம் வரப்போகிறது. போட்டி தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள்.

குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நிதானம் அவசியம். பங்குச் சந்தைகளில் செய்யும் முதலீடுகள் மூலம் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியாவும் பொறுமையாகவும் எதையும் கையாளுங்கள்.

மகரம்

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்கிறார். ருச்சிக யோகம் தேடி வரப்போகிறது.

சுகமான நாட்கள், வீடு, மனை வாங்கலாம். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம்.

உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வீட்டில் வாழ்க்கைத்துணையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகிறீர்கள்.

கும்பம்

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் நுழைகிறார் செவ்வாய். உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு.

வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி தேடி வரும். செய்யும் தொழிலில் வெற்றி தேடி வரும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும்.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தினசரியும் ஹனுமன் ஸ்லோகம் படிக்கவும்.

மீனம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ராகு உடன் இணைகிறார். பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அடுத்த 20 நாள் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் உஷ்ணமான பேச்சை ஏற்படுத்துவதார்.

செலவுகளை கட்டுப்படுத்துங்கள் தேவையில்லாமல் செலவு செய்து விட்டு பணத்தை கடன் வாங்க வேண்டாம். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன.

கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை தேவை.




அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US