செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்... 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்....!
செவ்வாய் பெயர்ச்சியானது கன்னி ராசியிலிருந்து சுக்கிரனில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைக்கிறார்.
செவ்வாய் பெயர்ச்சி 12 ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பற்று தெரிந்துகொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசியில், செவ்வாய் 7ம் இடத்தில் மனைவி மற்றும் தொழில் கூட்டாளி இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதில், உங்கள் தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்களால் சுப பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசியில், அதிபதியான சுக்கிரன் துலாமில் சஞ்சாரம் நிகழ்கிறது. செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பம் தொழில் என சூழலிலும் உங்களின் அடக்கி ஆளும் ஆதிக்கசெலுத்திவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியில், விளையாட்டு, ஆரோக்கியம் போன்றவற்றில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். மன உறுதி அதிகமாக இருக்கும், இதனால் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் சிறப்பாக செயல்பட முடியும்.
கடகம்
கடக ராசியில், செவ்வாய் பெயர்ச்சி அடைவதால், வீடு, நிலம், வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். தாயின் உடல் நலத்தில் ஆரோக்கியம் தேவை. சிம்மம் சிம்ம ராசியினருக்கு அதிபதி சூரியனும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் உங்களின் தைரியம், ஆற்றல் அதிகரிக்கும். மேலும், சகோதரர் வகையில் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு 2ம் வீட்டில் செவ்வாயின் சஞ்சரிக்கும் காரணத்தால், பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. துலாம் துலாம் ராசியினருக்கு, சஞ்சாரம் செய்வதால்ம் உங்களின் ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதை கட்டுப்படுத்துவதால் மன அமைதியின்மை யோகா தியானம் பயனடையலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களே செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் கவனமாக இருக்க வேண்டும். சோம்பலாக இருப்பதை உணர்வீர்கள். நிதி நிலையில் கவனம் தேவை. யோசித்து செலவு செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உங்கள் லாபமும் பெற்றிடுவீர்கள். இந்த காலத்தில், ஆதரவு பெறுவீர்கள். மருத்துவத் துறை, இராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணிபுரிந்தால் பல சலுகைகளும், நன்மைகளையும் பெறலாம்.
மகரம்
மகரம் ராசியில் 10ம் தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், உங்கள் வெற்றியை பெறலாம். மகர ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்களின் புத்தி சிறப்பாக சொந்த தொழிலை தொடங்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினரால், செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால், தந்தையிடம் கவனமாக இருங்கள். மனைவி வீட்டாரிடமும் சமூக உறவை கடைப்பிடிக்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை....
மீனம்
மீன ராசியில் திடீர் பயணங்கள் உங்களுக்கு ஆதயாத்தை கொடுக்கும். வீண் அலைச்சல், மன உளைச்சல், தேவையற்ற உடல் நலப் பிரச்சினைகளைத் தரக்கூடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.