வாயு தொல்லைக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ரசம்... செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்வது?
பொதுவாகவே பூண்டு உணவில் சுவையை அதிகரிப்பதுடன் உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ பலன்களையும் கொடுக்கின்றது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் வழங்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிவது நல்ல சிறந்த தீர்வை கொடுக்கும்.
கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்பட துணைப்புரியும் மற்றும் வயிற்று பிரச்சனைகளையும் நீங்கும்.
குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதுடன் செரிமான கோளாறுகளுக்கும் தீர்வு கொடுக்கும். குறிப்பாக வாயு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை வைத்து செட்டிநாட்டு பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு பூண்டு ரசம் வைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1/4 கப்
புளிச்சாறு
தக்காளி -2
நெய்-1 ஸ்பூன்
கடுகு-1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
பெருங்காயம்
நசுக்கிய பூண்டு-6 பல்
கறிவேப்பிலை
மிளகு-1/2 ஸ்பூன்
சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சர்க்கரை -1 ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை பிரஷர் குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரையில் நன்றாக வேக வைத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
குக்கரின் அழுத்தம் வெளியேறியதும், பருப்பை நன்றாக மசிக்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளியை ஊறவைத்து புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாக சூடாக்கி,கடுகு மற்றும் சீரகம் சேர்த்து அவை பொரிய விட்டு,கறிவேப்பிலை, பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளி பேஸ்ட், புளி தண்ணீர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், சர்க்கரை மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் செட்டிநாட்டு பூண்டு ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |