Parkinson's disease symptoms: உதறுவாதம் என்றால் என்ன? இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
பொதுவாக முதுமையடையும் போது ஏற்படும் நோய்களில் உதறுவாதம் அல்லது தளர்வாதம் என அழைக்கப்படும் ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) பாதிப்பபு முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த நோயின் தாக்கம் முன்னரை விடவும் தற்காலத்தில் அதிகதித்து வருகின்றது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் 100இல் ஒருவருக்கு இந்த நோய் தாக்கம் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு மற்றும் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை வெய்யும் நிலை மற்றும் தீவிர மனஅழுத்தம் காரணமாக தற்காலத்தில் சிலருக்கு நடுத்தர வயதிலும் உதறுவாதம் என்படும் வாய்ப்பு அதிகரித்து வருகின்றது.
பார்கின்சன் நோய் எனப்படும் தளர்வாதம் தீவிரமாகி வரும் முடக்கு நரம்புச்சிதைவு நோயாகும். மெதுவாகவும், விறைப்பாகவும்,ஸ்திரமற்ற நிலையிலும் இருத்தல் போன்ற இயக்க பிரச்சனைகளை இது குறிக்கும்.
பார்க்கின்சன் நோய் ஏற்பட என்ன காரணம்?
பார்க்கின்சன் நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாக கண்டறிப்படவில்லை.
மரபுணு தொடர்பு ,தொழிற்சாலைக் கழிவுகளும், மாசுபட்ட சுற்றுச்சூழால் ஏற்படும் பக்கவிளைவுகளும் அதிகரித்த மன அழுத்தம் பார்க்கின்சன் நோய் ஏற்பட பிரதான காரணமாக அமைகின்றது.
சிறுவயதில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும் பழக்கம் இல்லாதவர்களுக்கு முதுமையில் இந்த நோய் தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
மூளை நரம்பணுக்களில் ‘டோபமின்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் சுரப்பது குறைந்துவிடும்போது, உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படுவதன் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. இது மின் ஆற்றலை இழந்துபோன பேட்டரிக்கு ஒப்பான ஒரு நிலை ஆகும்.
பெரும்பாலும் ‘டோபமின்’ சுரப்பு 80% குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றது.
அறிகுறிகள் எப்படி இருக்கும்?
பார்க்கின்சன் நோயை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று தான் ஆரம்ப கட்டத்தில் கைகளில் ஏற்படும் நடுக்கம்.
இந்த நோய் தாக்கம் ஆரம்பிக்கும் போது தாக்கத்துக்கு உள்ளானவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்வார்கள்.
அதனை தொடர்ந்து கை விரல்கள் ஆடிக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். இது தீவிரமடையும் போது இந்த நடுக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவ ஆரம்பிக்கும்.
குறிப்பாக ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் ஏற்படும். ஏதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டே இருக்கும் போது நடுக்கத்தை உணர வாப்பு இருக்காது.
இந்த நிலை தீவிரமடையும் போது உறக்கத்தில் நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சில் மடுமாற்றம் ஏற்படும். முணுமுணுப்பதுபோல் பேசும் நிலை உருவாகும்.
மற்றவர்களுடன் கைகுலுக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அல்லது எழுதும் போதும் கையெழுத்து போடும் போதும் கூட போராட வேண்டிய நிலையில் கைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
வாசனையை உணரமுடியாத நிலை இந்த நோய் தாக்கத்தின் முக்கிய அறிகுறியாகும். தசைகள் இறுகிவிடும். உடலியக்கங்கள் குறையும். உதாரணமாக, ஓரிடத்தில் உட்கார்ந்தால், நீண்ட நேரத்துக்கு அசைவுகள் அதுவும் இன்றி இருப்பார்கள்.
எழுந்து நிற்கும்போதும் நடக்கும்போதும், படுக்கையைவிட்டு எழும்போது தள்ளாடும் நிலை காணப்படும். அதாவது சில நொடிகள் மயக்கம் வருவது போல் உணருவார்கள்.
அடிக்கடி விழுந்துவிடுவார்கள். செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உண்ணும்போது, உடை உடுத்தும்போது, குறிப்பாக சட்டைகளில் பட்டன்களை போடும் போது அதிக தடுமாற்றம் ஏற்படும்.
எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும். உணவை விழுங்குவதற்கு கஷ்டப்படுவார்கள்.
மேலும் திடீர் உடல் எடை இழப்பு, மலச்சிக்கல் மற்றும் முழு நேர சோர்வு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளையும் சந்திப்பார்கள்.
சிகிச்சை
பார்க்கின்சன் நோய்க்கு நரம்புநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் பார்க்கின்சன் நோயைப் பொறுத்தவரையில் பொதுவான சிகிச்சை பலன் தருவதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிகிச்சை முறை காணப்படுகின்றது.ஒருவருக்குப் பலன் கொடுக்கும் சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தரும் என குறிப்பிட்டு சொல்ல முடியாது.
அவரவர் உடல் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைக்கான பலன் கிடைக்கும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த இயலாது. ஆரம்த்திலேயே அறிகுறிகளை கண்டறிந்தால், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த நோய் அறிகுறிகளை கொண்டவர்கள் கொடிமுந்திரி, ‘பெர்ரி’ பழங்கள், சைவ சூப்கள், பாதாம், வால்நட், முந்திரி, முட்டையில் வெள்ளைக் கரு, மீன், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகளவில் உணவில் நேர்த்துக்கொள்வது நல்லது.
அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், போதியளலு தூக்கம், மன அடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணதல் போன்றவற்றின் மூலம் பார்க்கின்சன் நோய்க்கு தாக்கத்தை குறைக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |