செட்டிநாட்டு ஸ்டைலில் மஸ்ரூம் சுக்கா - இப்படி ஒரு தடவை செய்ங்க
என்ன தான் வீட்டில் சுவையான ஆரோரக்கியமான உணவு சமைத்தாலும் ஹோட்டலில் சாப்பிட ஆசைப்படாதவர்கள் யாரும் இல்லை. காளான் என்றால் அதை சமைக்கும் முறையில் சமைத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதன்படி காளானை செட்டிநாடு ஹோட்டல் ஸ்டைலில் மஸ்ரூம் சுக்கா செய்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை செய்வது எளிது ஆனால் அதற்கேற்ற பக்குவத்தில் சொல்லபட்ட படிமுறைகளை பின்பற்றி செய்வது அவசியம்.
தேவையான பொருட்கள்
- மஷ்ரூம் 200 கிராம்
- வெங்காயம் 2
- தக்காளி 1
- பச்சைமிளகாய் 2
- இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் & டீஸ்பூன் மல்லித்தூள் 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
சுக்கா செய்ய முதலில் கொத்தமல்லி விதை , சோம்பு , மிளகு , சீரகம் , காய்ந்த மிளகாய் , கிராம்பு , இலவங்கப்பட்டை , கறிவேப்பிலை , தேங்காய் துருவல் இவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைநெல்லிக்காய் அளவுக்கு கொரகொரப்பான விழுதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை , எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இவை நன்கு பொன்னிறமாக வந்த பி்ன்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி சேர்த்து, வெட்டி வைத்த மஷ்ரூம் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக மென்மையாக வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து 57 நிமிடம் வேகவிட வேண்டும். இறுதியில் அதிக தீயில் வறுத்து 'சுக்கா" மாதிரி தண்ணீர் இல்லாமல் இறக்கவும்.
மேலே கொத்தமல்லி இலை தூவினால் சுவையான செட்டிநாடு மஷ்ரூம் சுக்கா தயார். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அப்படியே சிக்கன் சுவையை கொடுக்கும். இப்போது ஒரு பௌளில் போட்டு பரிமாறுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |