குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா? செட்டிநாடு பாணியில் கோழி ரசம் செய்து கொடுங்க
பொதுவாகவே பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று கம்மியாகவே இருக்கும். இதன் காரணமான குழந்தைகளுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
குழந்தைகளை பொருத்தவரையில் நோய்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு மருந்துக்களை கொடுப்பதும் கூட பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வராமல் குழந்தைகளின் ஆரோகியத்தை பாதுகாக்கும் கோழி ரசத்தை அருமையான சுவையில் செட்டிநாடு பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
சிக்கன்
பட்டை
புளி
தனியாத் தூள்
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
வெந்தயம்
மிளகுத்தூள்
பச்சை மிளகாய்
இலவங்கம்
ஏலக்காய்
இஞ்சி, பூண்டு விழுது
வெங்காய விழுது
தக்காளி
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், பட்டை, லவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு கருவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன் பின்னர் ஒன்று சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்து வதக்கி, அதனுடன் சிக்கனையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்றாக கிளறிவிட்டு வேக விட வேண்டும்.சிக்கன் நன்றாக வெந்ததும் புளி கரைசலை சேர்த்து வேகவிட வேண்டும்.
பின்னர் சிக்கனை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பரிமாறும் சமயத்தில் சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாறினால் அருமையான சுவையில் செட்டிநாடு கோழி ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |