Chettinad Fish Fry: அரைத்து வைத்த செட்டிநாட்டு மீன் வறுவல்... இனிமேல் இப்படி செய்ங்க
பொதுவாகவே அசைவ உணவுகளில் ஆரோக்கியமானது என பார்த்ததால் மீன்கள் தான் சிறந்த தெரிவாக இருக்கும்.
மீனை குழம்பு வைத்து சாப்பிடுவதை விடவும் பொறித்து அல்லது வறுத்து சாப்பிடுவதே அனைவருக்கும் பிடிக்கு.
மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டலாம் என்பவர்கள் தான் அதிகம்.
அந்தவகையில், அரைத்து வைத்த சுவையான செட்டிநாட்டு மீன் வறுவல் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செட்டிநாடு மசாலா அரைக்க தேவையானவை
சிறிய வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 12
கொத்தமல்லி விதை - 1 தே.கரண்டி
கருப்பு மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கிராம்பு - 10
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி
மற்ற பொருட்கள்
மீன் துண்டுகள் - 6
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடானதும் கொத்தமல்லி விதை, சீரகம், கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை போட்டு அளவான தீயில் நன்றாக வறுத்ததுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மிக்ஸி ஜார் உலர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் செட்டிநாடு மீன் மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளில் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிசைந்து மீனை நன்கு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த மீனை எடுத்து அரைத்த மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி தோசை கல்லில் வைக்க வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் மீன் நன்றாக வேகும் வரை நன்றாக வறுத்தெடுத்தால் செட்டிநாடு மீன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |