நிச்சயம் ஒருநாள் உங்களை சொர்க்கத்தில் சந்திக்கின்றோம்... சேதுராமன் மனைவி உருக்கம்!
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி தனது இன்டாகிராமில் கணவர் குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சேதுராமன்
பிரபல மருத்துவரும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானவருமானவர் தான் டாக்டர் மற்றும் நடிகர் சேதுராமன்.
இவரது திருமணம் கடந்த 2016ம் ஆண்டு உமா என்ற பெண்ணுடன் நடந்தது. ஆனால் எதிர்பாரத விதமாக 2020ல் கொரோனா சமயத்தில் மார்ச் மாதம் 26ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்தார்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமான இருந்த சேதுராமனின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் மறைவின் போது மனைவி உமா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருந்தார். சேதுவின் மறைவுக்குப் பின்னறே உமா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சேதுவின் பழைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை உமா பகிர்ந்துள்ளார்.
இதில் ”1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது. உடலளவில் நீங்கள் பிரிந்தாலும் உங்களது நினைவுகள் வலுவாக எங்களை வழிநடத்துகிறது. வாழ்க்கை குறுகியது என்பதை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. எங்களுடைய கடினமான சமயத்தில் எதோவொரு வகையில் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள்.”
“மார்ச் 25, 2020 அன்று, ’கோவிட் லாக்டவுனுடன் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்து பலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள்.
எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. ஏன் குடும்பத்தை தனியாக விட நினைக்கிறார்கள்?’ என்று நீங்கள் சொல்லி மக்களுக்கு நேர்மறை எண்ணங்களை வழங்கும் பல பதிவுகளை வெளியிட்டீர்கள்.
எங்களின் கடினமான நேரங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். ‘அப்பா எப்போது வருவார்? அவரை நாம சர்ப்ரைஸ் செய்யலாம்’ என சஹானா கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.
[XT9YAஸ
அவளுக்கு அப்பா வரமாட்டார் என்பது தெரியாது. அவளும் நானும் நிச்சயமான ஒருநாள் உங்களை சொர்க்கத்தில் சந்திக்கின்றோம்.
அதுவரை எங்களை வழிநடத்திக் கொண்டே இருங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் பலரது கவனத்தையம் ஈர்த்துவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |