2வது முறையாக உலக சாம்பியனை தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா - குவியும் வாழ்த்துக்கள்
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக தோற்கடித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா(16). இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆன்லைனில் நடைப்பெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் நார்வேயைச் சேர்ந்த கார்ல்ஸென்னை வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், செஸ் பில் மாஸ்டர்ஸ் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. வரும் 26-ஆம் தேதி வரை அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கார்ல்ஸென்னை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
மேலும், இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40வது சுற்றுக்கு பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
When the expression says it all!
— ChessBase India (@ChessbaseIndia) May 21, 2022
The moment when the World Champion blundered and @rpragchess scored another win over Magnus Carlsen! This time at the Chessable Masters!
Full video: https://t.co/96laiTquNR pic.twitter.com/9bPju5FMzZ