செஸ் ஒலிம்பியாட் ; 44 கிலோ எடைக்கொண்ட தம்பி இட்லி - அசத்திய தமிழகர்கள்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், 186 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை தமிழக அரசே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறது.
இதனிடையே, பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதனிடையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் இனியவன்.
44 கிலோ எடை கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான தம்பி உருவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இட்லியை பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.

மேலும், இந்த இட்லியில் சிறு தானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இன்று பலரும் சிறு தானியங்களை மறந்து துரித உணவகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரித்துள்ளனர்.
தம்பி இட்லியை உருவாக்க 24 மணி நேரம் செலவு செய்து இந்த ஒரு இட்லியை தயார் செய்திருப்பதாகவும் இனியவன் தெரிவித்துள்ளார்.
இதனால், கடற்கரை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த வித்தியாசமான இட்லியை பார்த்து தங்களது செல்போனில் புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.
