செஸ் ஒலிம்பியாட்; ஆழ் கடலில் தம்பி உடையணிந்து செஸ் விளையாடி அசத்திய வீரர்கள்; வைரல் வீடியோ
இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது.
இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் சின்னமான 'தம்பி' தோற்றத்துடன் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தம்பி போன்று உடையணிந்து கடலுக்குள் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
This is different level of canvas a event. #ChessOlympiad2022 #NammaChennai @joybhattacharj @bhogleharsha https://t.co/USveY0cY0l
— Vijay DINAKARAN (@Vjdinakaran) August 1, 2022